அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதால் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென திடீரென பிரேக் போட்டதால், வந்த தனியார் பேருந்து மீது லாரி அதிவேகமாக மோதியது. அதற்கு பின்னால் வந்த கார் லாரி மீது மோதி மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















