இளம்பெண் கூட்டு பலாத்காரம்

கொச்சியில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய வழக்கு விசாரணையில், அந்த பெண் மாடலாக பணிப்புரிந்து வருவதும், வியாழக்கிழமை இரவு பார்ட்டி ஒன்றை முடித்து விட்டு, வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி வீட்டில் விடுவதாக கூறியுள்ளனர். 3 பேராக சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்பு அவரது வீட்டுக்கருகில் தூக்கி வீசி உள்ளனர். அந்த பெண்ணின் நண்பர் ஒருவர் அவரை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags :