விஜயகாந்த்சிகிச்சைக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார்

by Editor / 30-08-2021 10:31:47am
விஜயகாந்த்சிகிச்சைக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார்

நடிகர் விஜயகாந்த் சிகிச்சை மேற்கொள்ள வெளிநாடு செல்கிறார். தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த்துக்கு கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது சிகிச்சை எடுத்தபின் தேர்தல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இருப்பினும் தேர்தல் முடிந்தவுடன் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்த்தால் சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த 2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டார்.இந்த நிலையில் 2 வருடங்களுக்கு பின்பு, விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக இன்று துபாய் சென்றார். லண்டனில் உள்ள பிரபல மருத்துவர் ஒருவர் அவருக்கு நடைபயிற்சி மற்றும் பேச்சுப் பயிற்சி கொடுப்பதற்காக, துபாய் வருகிறார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

 

Tags :

Share via
Logo