அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து மேடையில் முகாமிட்டுள்ளனர் இந்த போட்டியில் கலந்துகொள்வதற்கு 1000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் தலா ஒரு சொகுசு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.வெற்றிபெறுபவர்களுக்கும்,வெற்றிபெறும் மாடுகளின் உரிமையாளர்களுக்கும் தலா 1கிராம் தங்க காசு வழங்கப்பட்டு வருகிறது.
Tags :