சென்னையில் இன்று டாக்டர் எம்ஜிஆர் கல்வி நிறுவன 34 ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி. பி .ராதாகிருஷ்ணன்.
சென்னையில் இன்று டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 34 ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி. பி .ராதாகிருஷ்ணன் இன்று சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார்.. இதனைத் தொடர்ந்து பிற்பகலில் தாஜ் கோரமண்டலின் நடைபெறும் ராம்நாத் கோயங்காநிகழ்வில்பங்கேற்க இருக்கிறார். மாலை 5 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கில் பிரம்மாண்ட பொது வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதோடு இரவு 7 மணி அளவில் தமிழக ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர்ஆா்.என் ரவி அளிக்கும் விருந்தில் பங்கேறுகிறார். நாளை வேலூர் பொற்கோவில் உள்ள ஸ்ரீ சக்தி அம்மாவின் 50 ஆவது பொன்விழா ஜெயந்தி கொண்டாட்டத்திலும் சென்னையில் நடைபெறும் ஒன்பதாவது சித்த மருத்துவ நாள் விழாவிலும் பங்கேற்கிறார். 15 -ஆவது இந்திய துணை குடியரசு தலைவராக செப்டம்பரில் பதவியேற்ற அவர் சென்னைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.
Tags :

















