மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம்

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நேரடி ராணுவ தாக்குதல் நடத்த ஈரான் உயர் தலைவர் அலி காமெனி உத்தரவிட்டுள்ளார். மேலும், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழந்ததால் அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. இதனிடையே, இந்திய குடிமக்கள் லெபனான் நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Tags :