இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க ரூ.50,000 நீதி - மத்திய அரசு

by Editor / 10-06-2021 08:54:18am
இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க ரூ.50,000 நீதி - மத்திய அரசு

இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையுடன் இலக்கியப் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.  30 வயதுக்கு உட்பட்ட இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளை வெளிப்படுத்தும், இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கலாச்சாரம், பண்பாடு, ஒருமைப்பாடு, இலக்கிய உள்ளிட்டவற்றை படைக்க, இளைஞர்களை தயார்படுத்தும் வகையில், இந்த திட்டத்தை, பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு, innovateindia.mygov.in/yuva/ என்ற, இணையதள பக்கத்தின் வழியாக விண்ணப்பித்து, அடுத்த மாதத்துக்குள், தங்களின் படைப்புகளை, இளைஞர்கள் பதிவேற்ற வேண்டும் . தேசிய புத்தக அறக்கட்டளையின் வல்லுனர் குழு 75 படைப்புகளை தேர்வு செய்யும் . அந்த படைப்புகள் வரும் சுதந்திர தினத்தில் , இந்திய அரசு இணையதளத்தில் பதிவேற்றப்படும் . அடுத்தாண்டு இளைஞர் தினமான , ஜன ., 12 இல் நுாலாக வெளியிடப்படும் .

சிறந்த படைப்புகளை எழுதிய , 75 பேருக்கு , மூன்று மாத இலக்கிய பயிற்சியை , தேசிய அளவில் சிறந்த எழுத்தாளர்கள் அளிப்பர் . அத்துடன் , ஆறு மாதங்களுக்கு , தலா , 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கி , சிறந்த இலக்கியங்களை படைக்கும் வகையில் , வழிகாட்டுதல்களும் வழங்கப்படும் .

இந்த எழுத்தாளர்கள் படைக்கும் படைப்புகள் , தேசிய புத்தக நிறுவனத்தின் சார்பில் , நுால்களாக்கப்பட்டு , இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படும் . அந்த புத்தகங்களின் விற்பனையில் , 10 சதவீதம் காப்புரிமையாகவும் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via