மகப்பேறு இறப்பே இல்லாத மாவட்டமானது விருதுநகர்

by Editor / 01-08-2024 11:41:47am
மகப்பேறு இறப்பே இல்லாத மாவட்டமானது விருதுநகர்

தமிழ்நாட்டில் முதல்முறையாக ஓராண்டில் மகப்பேறு இறப்பே இல்லாத மாவட்டம் என்ற பெருமையை விருதுநகர் பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை வட்டத்தில் ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான ஓராண்டு காலத்தில் 7,991 பிரசவங்கள் நடந்துள்ளன. இதில் ஒரு மகப்பேறு இறப்பும் நிகழவில்லை. குறிப்பாக சிசேரியன், சுகப்பிரசமும் இதில் அடங்கும். சமீபத்தில் விருதுநகர் மாவட்ட மருத்துவமனைகளில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

 

Tags :

Share via