இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

by Editor / 21-11-2022 11:51:30am
 இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வந்தது. எனினும், சில நாட்களாக மழை விட்டதால் மக்கள் தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட ஆரம்பித்தனர். இந்த நிலையில் நேற்று மாலை முதல் தமிழ்நாட்டின் அநேக இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

. நாளை சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் ஒரு சில நேரங்களில் 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும். இதனால் மீனவர்கள் வங்காள விரிகுடா , அந்தமான் கடற்கரை, இலங்கை கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பதிவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோலவே தென் மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழையானது திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களிலும் லேசான மழையானது பெரம்பலூர், நாமக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via