சிவகாசி விபத்து: ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்த முதல்வர்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகர் சிவகாசியில், தனியார் பட்டாசு ஆலை வெடித்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சமும், அதிக காயம் அடைந்தவருக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயத்துடன் சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Tags :