ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். முக்கிய தலைவர்களை நேரில் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 4ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார். தமிழகத்தின் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் ஆளுநர் டெல்லி சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திருபுவனம் காவலாளி காவல் மரண விவகாரம் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றன.
Tags :