போதை பொருள் வழக்கு - வரலட்சுமிக்கு என்ஐஏ சம்மன்

போதைப் பொருள் கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். கேரளா மாநிலம் விளிஞ்சம் கடற்கரைப் பகுதியில் 300 கிலோ ஹெராயின் மற்றும் ஏகே 47 பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகை வரலட்சுமி உதவியாளராக இருந்த ஆதிலிங்கம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகை வரலட்சுமி ஆஜராக என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதால், உடனடியாக விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று வரலட்சுமி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :