வீடுகளை தாண்டும் மலைப்பாம்பு

by Staff / 29-08-2023 12:59:29pm
வீடுகளை தாண்டும் மலைப்பாம்பு

ஆஸ்திரேலியாவில் இந்தோனேஷியாவை பூர்வீகமாக கொண்ட மலைப்பாம்புகள் ஏராளமாக வாழ்ந்து வருகின்றன. இவை ஒருசில நேரம் குடியிருப்புகளின் மேலே இருந்து, மரங்கள் வழியே பயணிப்பது நடக்கும். இந்நிலையில், சமீபத்தில் மலைப்பாம்பு குயின்ஸ்லாந்து பகுதியில் இருக்கும் குடியிருப்பில் இருந்து மரத்தின் உதவியுடன் மற்றொரு பகுதிக்கு பயணித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. சினிமாக்களில் நாம் பார்ப்பது போன்று மிகப்பெரிய மலைப்பாம்பாக அது காணப்படுகிறது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா ட்விட்டரில் பதிவிட்ட நிலையில் வீடியோ வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via