ஆட்சியர் பெயரில் போலி கணக்கு 3 லட்சம் ரூபாய் வரை மோசடி
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியின் விவசாயத்துறை நேரடி உதவியாளராக பணிபுரிந்து வருபவர் சர்மிளா.இவரது வாட்சப் எண்ணிற்கு ஆட்சியரின் புகைப்படத்துடன் கூடிய போலி கணக்கிலிருந்து லிங்க் மூலம் பத்தாயிரம் ரூபாய் அனுப்பக் கோரி குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதனை நம்பிய உதவியாளர் சர்மிளா பத்தாயிரம் ரூபாயை அந்த லிங்க் மூலம் அனுப்பியுள்ளார்.தொடர்ந்து அந்த லிங்கிற்கு 3 லட்சம் ரூபாய் வரை சர்மிளா அனுப்பியதாக கூறப்படுகிறது. அடிக்கடி குறுஞ்செய்தி வரவே சந்தேகமடைந்த சர்மிளா.இது பற்றி ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்ததில் அது போலி கணக்கு எண் என்பது தெரியவந்தது.இதையடுத்து, அவர் சைபர் கிரைம் போலிசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த போலி செல்போன் எண் பீகார் மாநிலத்திலிருந்து செயல்பட்டு வருவது தெரியவந்தது. மேலும், இச்சம்வபம் குறித்த முதற்கட்ட விசாரணையை சைபர் கிரைம் போலீசார் தொடங்கியுள்ளனர்.
Tags :