எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக முடியாது ஆர். வைத்திலிங்கம் கருத்து

by Staff / 19-03-2023 03:06:13pm
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக முடியாது ஆர். வைத்திலிங்கம் கருத்து

எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக அதிமுக பொதுச் செயலாளராக வரவேமுடிவுயாது என முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் தெரிவித்தார்.அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் தஞ்சாவூர் வடக்கு, தெற்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், செய்தியாளர்களிடம் கூறியது:மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி இருக்காது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது அவரது கருத்துதான். பாஜக மேலிட தலைவர்களின் கருத்து அல்ல. பாஜகவின் மேலிட தலைவர்கள் கூறுவதுதான் சரியாக இருக்கும். அதிமுக பொதுக் குழு விவகாரத்தில் நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் எனநம்புகிறோம். நியாயம் எங்களது பக்கம் உள்ளது. சட்ட விதிகள் எங்களுக்கு ஆதரவாக உள்ளன. எனவே, இன்னமும் தேர்தல் ஆணையத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமே உள்ளார். எனவே, எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம்.டிடிவி. தினகரன், வி. கே. சசிகலா என கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்த்து அதிமுகவை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். இவை, மிக விரைவில் நடைபெறும்.அதிமுகவின் பொதுச்செயலாளராக நிச்சயமாக பழனிசாமி வரவே முடியாது. பொதுச் செயலாளர் தேர்வு என்பது முறைப்படி அறிவிக்க வேண்டும். ஆனால், இங்கு எதுவும் முறைப்படி நடைபெறவில்லை" என்றார்.

 

Tags :

Share via