சென்னை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்!
சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்க தாமதம் ஏற்படுவதால் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உட்பட சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 4,368 படுக்கைகள் உள்ளன. இவற்றில் 90 சதவிகித படுக்கைகள் நிரம்பிவிட்டன. இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு உடனடியாக படுக்கை கிடைக்காமல் ஆம்புலன்ஸில் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் இருக்கிறது. சென்னையில் மொத்தமாக 2,000 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டும் உள்ளநிலையில், அனைத்தும் நிரம்பிவிட்டதால் குறைந்தபட்சம் 4 மணி நேரம் வரை நோயாளிகள் காத்திருக்கிறார்கள். அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு நோயாளிகளை அழைத்து வருகின்றனர். நேற்று முதல் கூடுதலாக 400 படுக்கைகள் நந்தம்பாக்கம் மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகளை அங்கு மாற்றும் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் அதிகரிப்பை அடுத்து 10 நாட்களில் 3,000 படுக்கைகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
Tags :


















.jpg)
