விஜய் சுற்றுப்பயணம் செய்தியாளர்களிடம் போலீசார் கெடுபிடி.

நாமக்கல்லில் விஜய் சுற்றுப்பயணத்தில் தவெக தொண்டர்களிடம் பேட்டி எடுக்க முயன்ற செய்தியாளர்களிடம் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தொண்டர்களிடம் தேவையின்றி பேட்டி எடுக்க வேண்டாம் என காவல்துறையினர் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தவெக விஜய் நாமக்கல்லில் இன்று (செப்.27) பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். அவரைக் காண கூடிய தொண்டர்களிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்த நிலையில், போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
Tags : விஜய் சுற்றுப்பயணம் செய்தியாளர்களிடம் போலீசார் கெடுபிடி.