கனமழை : 4 மாவட்டங்களுக்கு "மஞ்சள்"
கேரளாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்று கேரள வானிலை மையம் கணித்துள்ளது.
இன்று ஆலப்புழா, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதனால் அம்மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை கொல்லம், எர்ணாகுளம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், வருவாய், பேரிடர் மீட்பு படையினர் அடுத்த சில நாட்களுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்னர்.கேரளாவில் மலையோர மாவட்டங்களான இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
Tags :