குற்றாலத்தில் மினரல் ஆயில் தடவப்பட்ட ஒரு டன் பேரிச்சம்பழம் பறிமுதல்.

by Editor / 16-01-2024 04:02:10pm
குற்றாலத்தில் மினரல் ஆயில் தடவப்பட்ட ஒரு டன் பேரிச்சம்பழம் பறிமுதல்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்பொழுது சபரிமலை சீசன்  இறுதி காலம் என்பதால் மகர விளக்கு தரிசனத்திற்கு  நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பும் ஐயப்ப பக்தர்கள் தவறாமல் குற்றாலத்தில் வந்து புனித நீராடி விட்டு தங்களது வீடுகளுக்கு தேவையான அல்வா சிப்ஸ் மஸ்கோத் அல்வா பேரிச்சம்பழம் உள்ளிட்டவைகளை வாங்கிச் செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது இந்த நிலையில் குற்றாலத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தர மற்ற முறையில் அல்வா மற்றும் மஸ்கோத் அல்வா பேரிச்சம்பழம் சிப்ஸ் உள்ளிட்டவர்கள் தரம் குறைந்து தயாரிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் சென்றதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் குற்றாலம் பகுதியில் தொடர்ந்து சோதனைகளை நடத்தி பல டன் பேரிச்சம்பழம் இரண்டு டன் மஸ்கோத் அல்வா ஒரு டன் சிப்ஸ் உள்ளிட்டவர்களை பறிமுதல் செய்து அழித்தார்.

இந்த நிலையில் இன்று குற்றாலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள  கடைகளிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நாக சுப்பிரமணியன் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் திருமலைவாசன் குழு குழுவினர் சோதனை மேற்கொண்டார் குற்றாலம் பேரருவிக்கு செல்லும் பாதையில் உள்ள ராஜ் பழக்கடை குடோனில் சோதனை மேற்கொண்டார் அப்பொழுது அங்கு பெட்டி பெட்டியாக மினரல் ஆயில் தடவப்பட்ட சுமார் 1100கிலோ பேரிச்சம்பழம் பதிக்க வைத்திருப்பது கண்டறியப்பட்டது.தொடர்ச்சியாக அவைகளை பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றப்பட்டு குற்றாலம் பழைய குற்றாலம் சாலையில் உள்ள குற்றாலம் பேரூராட்சி சொந்தமான உரக்கடங்கில் கொண்டு சென்று பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

 

Tags : குற்றாலத்தில் மினரல் ஆயில் தடவப்பட்ட ஒரு டன் பேரிச்சம்பழம் பறிமுதல்.

Share via