தமிழ்நாட்டில்   17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

by Editor / 30-09-2024 05:26:09pm
தமிழ்நாட்டில்   17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால். தமிழ்நாட்டில் வரும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று  வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தநிலையில் , தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, தேனி ஆகிய 17 மாவங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது மாலை 05.40 மணி வரைஇடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில்   17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

Share via