சென்னை உலா என்கிற சுற்றுலா பேருந்து சேவைஇன்று தொடக்கம்.
சென்னை உலா என்கிற சுற்றுலா பேருந்து சேவையை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார் .சென்னை மெரினா அண்ணா சதுக்க பேருந்து நிறுத்தத்தில் இருந்து இந்த பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். வல்லவன் இல்லத்தில் இருந்து எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம் ,அண்ணா மேம்பாலம், கண்ணகி சிலை ,மெரினா கடற்கரை சாந்தோம் ,சென்ட்ரல் ரயில் நிலையம் என 18 இடங்களுக்கு சென்னை உலா சுற்றுலா பேருந்து காலை 10.00 மணி முதல் இரவு 10.oo மணி வரையும் வார விடுமுறை நாட்களில் வார நாட்கள் ஆன திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.99 மணி முதல் தொடங்கி இரவு 10.99 மணி வரை பயணிக்கலாம் .இந்த சேவை ,சென்னையின் அடையாளங்களாக திகழும் பகுதிக்கு மிக எளிதாக சுற்றி பார்க்கும் முகமாக செய்யப்பட்டுள்ளது.. இதற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது,.சென்னையில் ஒரு காலகட்டத்தில் அனைத்து பல்லவன் பேருந்துகளும் சிவப்பு வண்ணத்தில் உலா வந்தன அதை ஞாபகப்படுத்தும் விதமாக மீட்டு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது
Tags :

















