கட்டண சிகிச்சை.. எம்.பி ரவிக்குமார் வரவேற்பு

by Staff / 11-05-2023 04:10:56pm
கட்டண சிகிச்சை.. எம்.பி ரவிக்குமார் வரவேற்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் வராதோர் மற்றும் சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைகளுக்கு கட்டணம் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதன்படி, விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குறிப்பிட்ட வகை நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு கட்டணம் என்ற அறிவிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கட்டண சிகிச்சை அறிவிப்பை ஜிப்மர் நிர்வாகம் நிறுத்தி வைத்த முடிவுக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் வரவேற்பளித்துள்ளார்.

 

 

Tags :

Share via