சிறையில் கைதி கொலை  பாளை.ஜெயிலர். பணியிடை நீக்கம்.

by Editor / 04-06-2021 06:10:26pm
சிறையில் கைதி கொலை  பாளை.ஜெயிலர். பணியிடை நீக்கம்.

 

நெல்லை பாளையங்கோட்டை சிறையில் கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறை ஜெயிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லையில் மூன்றடைப்பு பகுதியில் உள்ள வாகை குளத்தில் முத்து மனோ(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய மனோவை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி மனோவிற்கும் சிறையில் இருந்த மற்ற கைதிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கைதிகள் மனோவை அடித்து கொலை செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சிறையில் இத்தகைய அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் வகையில் அஜாக்கிரைதையாக இருந்த பாளையங்கோட்டை மத்திய சிறை சாலை துணை ஜெயிலர், 3 உதவி ஜெயிலர்கள் உட்பட 6 பேரை ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெயிலர் சண்முகசுந்தரம் நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறைத்துறை டிஜிபி சுனில்குமார்சிங் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

Tags :

Share via