மழை நிவாரணம்: கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ளது கோட்டக்குப்பம் நகராட்சி இந்த நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெஞ்சல் புயல் காரணமாக கோட்டகுப்பம் பகுதி பல்வேறு இடங்கள் புயலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ரூபாய் 2000 நிவாரணம் அளிக்கப்பட்ட நிலையில் கோட்டகுப்பம் நகராட்சியில் பல வார்டுகளில் நிவாரணம் வழங்காததை கண்டித்து அந்த பகுதி மக்கள் கோட்டகுப்பம் ரவுண்டானா கிழக்குக்கடை கரை சாலை 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர் சம்பவம் அறிந்து வந்த கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் படுத்தினர் பின்பு போராட்டம் நடத்தியவர்கள் கலந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கரை சாலை சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags : மழை நிவாரணம்: கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல்