ஆந்திரா மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக சர்மிளா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்
ஆந்திரா மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக சர்மிளா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதலமைச்சராக இருந்த ஒய். எஸ். ஆர் .இன் மகள் ஷர்மிளா ரெட்டி. தெலுங்கானாவில் சந்திரசேகர் ராகுவுக்கு எதிராக அரசியல் l செய்து வந்தவர்.. பின்பு தம் சகோதரர் ஜெகன் மோகன் ரெட்டியையும் எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய நிலையில், அண்மையில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகா அர்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ,பிரியங்கா காந்தி முன்னிலையில் தமது கட்சியை காங்கிரஸ் கட்சியோடு இணைத்து காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார் .இரண்டு வார இடைவெளிக்குள் ஆந்திரா மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் காங்கிரஸ் கட்சியைவலுவாக காலூன்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags :