பாதுகாப்புடன் கவனமாக பட்டாசு வெடிக்க வேண்டும்" - மா.சுப்பிரமணியன்

by Staff / 23-10-2022 02:39:41pm
பாதுகாப்புடன் கவனமாக பட்டாசு வெடிக்க வேண்டும்

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியார்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்கஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2,127 ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் உள்ளன. புதிதாக 50 சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுவதால் அதன் எண்ணிக்கை 2,177 ஆக உயரும்.

தமிழகம் முழுவதும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தீபாவளி வெடி வெடிக்கும் போது ஏற்படும் தீ விபத்து, தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க 5 முதல் 10 படுக்கைகள் வரை தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் பாதுகாப்புடன் கவனமாக பட்டாசு வெடிக்க வேண்டும்" என எச்சரித்தார்.
 

 

Tags :

Share via