பூங்குளம் மலையில் ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த போலீசார் பூங்குளம் மலைப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த பேரல்களில் இருந்த சுமார் 1000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர் .மேலும் சாராயம் காய்ச்சுவதற்கான அடுப்பு உள்ளிட்ட பொருட்களை போலீசார் அகற்றினர். சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த ஒரு மூட்டை வெல்லத்தையும் போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :