ஏர் ஹாரனை பயன்படுத்திய ஓட்டுனருக்கு நூதன தண்டனை வலைதளங்களில் வைரல்.

திருவாரூர் நாகை புறவழிச்சாலையில் திருவாரூர் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் ராஜ்மோகன் மற்றும் காவலர் மணிமாறன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சேலத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த லாரி அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரனை பயன்படுத்தியடி வந்தது.
அந்த லாரியை காவலர்கள் மறித்தும் நிறுத்தாத காரணத்தினால் விரட்டி சென்று லாரியை மடக்கி பிடித்து அந்த ஏர் ஹரனை கழற்றச் செய்து அதே லாரி டயரில் வைத்து உடைத்து வழங்கப்பட்ட நூதன தண்டனை சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Tags :