பண்ருட்டியில் அதிரடி கஞ்சா, விஷசாராயம் பறிமுதல்
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டைபோலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உதவி ஆய்வாளர்செல்வம் ஆகியோர்திருவாமூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள அய்யனார் கோவில் அருகே அதே ஊரை சேர்ந்த சரவணன் (வயது25) சுமார் 15 லிட்டர் பிடிக்கக்கூடியபாலிதீன் கவரில் சுமார் 10 லிட்டர் விஷ நெடி உள்ளசாராயமும், சுமார் 25 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலமும் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்துவழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து அவனிடமிருந்து விஷ சாராயம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags :