சுடுகாட்டில் ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை

by Staff / 05-09-2025 07:24:48pm
சுடுகாட்டில் ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி NGO. காலனியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மாரிச்செல்வம்(31). இவர் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில்  இன்று காலையில் சண்முகா நகர் சுடுகாட்டில் ஆட்டோ டிரைவர் மாரிச் செல்வம் முகம், மூக்கு பகுதியில் வெட்டுப்பட்ட ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டாரா ? அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags : சுடுகாட்டில் ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை

Share via

More stories