முதலமைச்சர் விஜய் அம்மா உணவகங்களை மறு சீரமைப்பு- முதலமைச்சர் விஜய் நடவடிக்கை
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள 620 அம்மா உணவகங்கள் தரமற்ற மற்றும் சுவை அற்ற உணவுகளை வழங்குவதாக புகார் வந்ததை அடுத்து தமிழக முதலமைச்சர் விஜய் அம்மா உணவகங்களில் எழுந்துள்ள புகார்களை அதிரடியாக களையும்யும் பொருட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அம்மா உணவக பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்றும் நவீன மற்றும் தேவையான புதிய சமையல் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்தல் வேண்டும் என்றும் ஏழை எளிய மக்களுக்கு சுவையான மற்றும் தரமான உணவுகளை தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இதற்கான மறு சீரமைப்பு மற்றும் கொள்முதல் செலவுகளை அந்தந்த மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 620 அம்மா உணவகங்களில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 383 உணவகங்களும் இதர மாநகராட்சிகளில் 237 உணவகங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :


















