இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது
சட்டமன்ற தோல்வி மற்றும் அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்களுக்கு இடையே இந்த அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அ.தி.மு.கவில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் ஒரு அணியினரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மற்றொரு அணியினரும் செயல்படுவதால் கட்சிக்குள் தலைமை போட்டி உச்ச நிலையை அடைந்துள்ளது தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாக கூறி எஸ்.பி. வேலுமணி சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்பட 26 மாவட்ட செயலாளர்களை எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் பதவியில் இருந்து நீக்கினார். கட்சியிலிருந்து வைக்கப்பட்டவர்களுக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளர்களை எடப்பாடி பழனிச்சாமி நியமித்தார். இதன் காரணமாக நீக்கப்பட்ட வேலுமணி சிபி சண்முகம் தரப்பினர் தங்களுக்கு பெரும்பான்மையானமேற்பட்ட மாவட்ட செயலாளர்களின் ஆதரவு இருப்பதாக கூறி பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து தீவிர எதிர்ப்பு களத்தில் இறங்கியுள்ளனர்.
Tags :


















