ரஷ்ய அதிபர் புதின் வரும் 19ஆம் தேதி அரசு முறை பயணமாக சீனா செல்கிறார்.

by Admin / 18-05-2026 01:47:02am
ரஷ்ய அதிபர் புதின் வரும் 19ஆம் தேதி அரசு முறை பயணமாக சீனா செல்கிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு சென்று வந்த சில நாட்களிலேயே ரஷ்ய அதிபர் புதின் வரும் 19ஆம் தேதி அரசு முறை பயணமாக சீனா செல்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பங்கை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் கோட்டான்மையை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இச்சந்திப்பின் போது பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன ரசியா சீனா இடையே கல்வி ஆண்டையும் தொடங்கி வைக்கிறார்கள் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேசுவதற்காக சீனப் பிரதமர் லீ. கியாங்கை புதின் சந்திக்க உள்ளார். உலகளாவிய அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது

 

Tags :

Share via
Logo