14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

by Staff / 07-11-2023 01:39:15pm
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, நெல்லை, தேனி, நீலகிரி, தென்காசி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

 

Tags :

Share via

More stories