குற்றால அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்ததால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும் இந்த சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் சீசன் தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் குற்றாலத்தை நோக்கி சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினர். இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை இல்லாததால் அனைத்து அருவிகளிலும் முற்றிலும் நீர்வரத்து குறைந்து உள்ளது ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. மெயின் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு உள்ளதால் ஆண்கள் மற்றும் பெண்களை போலீசார் வரிசையில் நின்று குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பழைய குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பழைய குற்றாலம் செல்லும் சாலையில் ஓரமாக கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதால் வெகு தூரம் நடந்து சென்று சுற்றுலாப்பயணிகள் குளிக்கின்றனர் இதனால் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகள் வருகை நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வரும் நிலையில் அந்தந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.மொத்தத்தில் மழையில்லாததால் குற்றால அருவிகளில் நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது.சீசன் தொடங்காத நிலையில் குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க திரண்டுவருவதால் ஏமாற்றமடைந்து சென்றவண்ணம் உள்ளனர்.
Tags : Tourists are disappointed as the water level in Courtallam falls is very low