வரதட்சணையாக பைக் கொடுக்காததால் திருமணம் ரத்து

வரதட்சணையாக பைக் கொடுக்காததால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது. மணமகனின் இந்த முடிவால் மணமகள் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. ஃபிரிட்ஜ், அலமாரி, சோபா செட், பைக் உள்ளிட்டவற்றை கொடுக்கவில்லை என்று திருமணத்தை ரத்து செய்வது நியாயமா என்று கேட்டனர். பைக் கொடுக்காமல் திருமணம் செய்ய மாட்டேன் என மாப்பிள்ளை விடாப்பிடியாக பிடிவாதம் பிடித்துள்ளார். இது சமீபத்தில் வட மாநிலம் ஒன்றில் நடந்துள்ளது. @gharkekalesh என்ற ட்விட்டரில் பதிவிட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :