நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் துணை செயலாளர் ஆக பாலசுப்ரமணியன் இருந்து வந்தார். இவர் இன்று காலை சொக்கி குளம் அருகே வல்லபாய் சாலை பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார்.சம்பவ இடத்திற்கு விரைந்த தல்லாகுளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் தியாகராஜனின் வீட்டருகே கொலை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.