திடீரென தீப்பிடித்து எரிந்த கார்; கணவன்-மனைவி உயிரிழப்பு

கேரள மாநிலம் கண்ணூர் அருகே குட்டியத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரஜித். இவரது
மனைவி ரிஷா. ரிஷா நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கண்ணூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்த நிலையில் ரிஷாவுக்கு இன்று பிரசவ வலி எடுக்கவே கணவர் தனது காரில் மனைவியை முன் இருக்கையிலும், உறவினர்கள் நான்கு பேரை பின் இருக்கையில் அமர்த்தி கொண்டு வேகமாக மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தார். கார் மருத்துவமனையின் அருகில் வரும் போது ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது.இதில் பின் இருக்கையில் இருந்தவர்கள் பிரஜித் கதவை திறந்து வெளியேற்றிய நிலையில் முன் இருக்கையில் அமர்திருந்தவர்கள் வெளியேற முடியாமல் காருக்குள் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் 90 சதவிகிதம் தீக்காயம் அடைந்த தம்பதிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் இருவரும் பலியானார்கள்.இந்த நிலையில் கார் தீப்பற்றி பிடித்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையின் அருகே நிகழ்ந்த விபத்து அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags :