தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது-இ.கம்யூ. டி.ராஜா

by Editor / 19-03-2022 06:17:26pm
 தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது-இ.கம்யூ. டி.ராஜா

நாகப்பட்டிணத்தில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  அகில இந்திய பொது செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்:

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திமுக அரசு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டாட்சி நெறிமுறைகளை காப்பாற்றி சமத்துவம், சமூக நீதிக்கான முயற்சிகளை ஏற்படுத்தி வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டமன்ற பட்ஜெட்டில் பெண் கல்விக்கு அரசு கொடுக்கிற முக்கியத்துவம் வரவேற்க தக்கது. மோடி ஆளும் பல்வேறு மாநிலங்களில் பெண்கள் , பெண் குழந்தைகள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது. 

ஒன்றிய அரசின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழகம். ஜிஎஸ்டி வரியால் தமிழகத்திற்கு வருவாய் இழப்பு. விவசாயத்திற்கு தனி பட்ஜெட் பாராளுமன்றத்தில் நடைபெற வேண்டும். 

தமிழகத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற, மதவெறி கொள்கைகளை முறியடித்து சமூக நல்லிணக்கத்தை உருவாக்க திமுக எடுக்கும் முயற்சிகளுக்கு இந்திய கம்யுனிஸ்ட் கட்சி துணை நிற்கும் 
மோடி தலைமையில் உள்ள ஆட்சி தொடர்ந்து மக்கள் விரோத செய்து வருகிறது. 
5 மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றாலும், பாஜக மக்களின் ஆதரவுகளை இழந்து வருகிறது. 
ஒன்றிய அரசின் கீழே உள்ள பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகளை தங்களுக்கு சாதகமாக பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது,தேர்தல் வெற்றிகளுக்கு பாஜக செலவிடும் தொகைகள் கற்பனைகளுக்கு நினைத்து பார்க்க முடியாது. பாஜக மட்டும்தான் பணம் படைத்த கட்சி.இந்தியாவில். வேலையில்லா திண்டாட்டம் அதிகம் நிகழ்ந்து வருகிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. 

அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் மீது அடக்குமுறைகளை அவிழ்த்துவிடும் செயல்களில் மோடியின் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கால்பிடித்து சேவை செய்யும் ஆட்சியாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயமாக்கு விற்று வரும் செயல்களில் வெறித்தனமாக பாஜக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. 

மதசார்பற்ற சனநாயக கட்சிகள் இன்றைக்கு ஒன்றுபட்டு இந்தியாவை காப்பாற்றவும், ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியல் சட்டத்தை காப்பாற்றவும் ஒன்று கூட வேண்டும். இந்தியாவே மதவெறி பாசிசம் தலைதூக்கி ஆட தொடங்கி உள்ளது. 

திமுக தலைவர் முக ஸ்டாலின் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார். அவருடைய முயற்சிக்கு நாங்கள் ஆதரவு தருவோம். கூட்டாட்சி நெறிமுறைகளை மோடி அரசு தகர்த்தி வருகிறது. மாநில உரிமைகள், மாநில அதிகாரங்களை பறிக்கும் செயல்களில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. 

மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசு மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமையை பறித்து தாக்குதல் நடத்தி கொள்ளுவது, படகுகளை பறிமுதல் செய்வது கண்டிக்கத்தக்கது.

 

Tags : Women get protection in Tamil Nadu - i.com.T Raja

Share via