யார் மீதும் புகார் கொடுக்க விரும்பவில்லை.. நடிகர் ராதிகா

by Staff / 02-09-2024 04:04:55pm
யார் மீதும் புகார் கொடுக்க விரும்பவில்லை.. நடிகர் ராதிகா

மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரவனில் பெண்கள் உடைமாற்றுவதை படம் பிடிக்க ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை தான் பார்த்ததாக நடிகை ராதிகா பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில், கேரள அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு தொலைபேசி வாயிலாக நடிகை ராதிகாவிடம் விசாரணை நடத்தியது. இதற்கு பதிலளித்த அவர் யார் மீதும் புகார் கொடுக்க விரும்பவில்லை என்று சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via

More stories

Logo