போலி எடைச்சீட்டு மூலம் பத்து டன் அதிகமாக கனிமவளம் பெற்றுச்சென்ற வாகனம் பிடிபட்டது.

தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக தினமும் கேரள மாநிலத்திற்கு 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் கனிம வளங்கள் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வருகின்றன இந்த நிலையில் இன்று காலை புளியரை போக்குவரத்து சோதனை சாவடி ஆய்வாளர் குமார் வாகன சோதனைநடத்தியதில் ஒரு வாகனம் சந்தேகத்திற்கு இடமாக வருவதாகவும் அதிக அளவில் எடை ஏற்றப்பட்டுள்ளதாகவும் போலியாக எடைச்சீட்டு தயார் செய்துள்ளதாகவும் ரகசிய தகவல் கிடைக்கவே அவர் குறிப்பிட்ட KL24V2572 என்ற 12 சக்கர வாகனத்தை நிறுத்தி எடைச் சீட்டை சோதனை செய்து பார்த்த பொழுது அதில் பிரானூர் பாடர் பகுதியைச் சேர்ந்த இடைநிலையத்தில் 38 டன் எடை இருப்பதாக கிடைச்சிட்டே இருந்ததை கண்டு கட்டளை குடியிருப்பில் செயல்பட்டு வரும் மற்றொரு இடை நிலையத்திற்கு கொண்டு சென்று வாகனத்தை எடை செய்து பார்த்த பொழுது சுமார் பத்து டன் கனிம வளம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. அளவுக்கு அதிகமாக 10 டன் கனிம வளங்களை ஏற்றி வந்ததை கண்டறிந்து அந்த வாகனத்தை கைப்பற்றி புளியரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் விசு என்பவரிடம் புளியறை போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த சம்பவம் புளியரை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags :