ஒருவருக்கொருவர் தெரியாமல் பல மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமை போக்சோ வழக்கில் கைது

by Staff / 17-10-2022 03:29:33pm
ஒருவருக்கொருவர் தெரியாமல் பல  மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமை போக்சோ வழக்கில் கைது

மதுரை மாநகர் அய்யர்பங்களாவை சேர்ந்தவர் சந்துரு. இவர், பேஸ்புக் மூலமாக மதுரையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரிடம் நட்பை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அவரை காதலிப்பதாகவும் கூறியுள்ளார். பின்னர் குடும்ப வறுமையை காட்டி பள்ளி மாணவியிடம் 13 பவுன் தங்க நகைகளை கைப்பற்றி சொகுசாக வாழ்ந்துள்ளார். மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதோடு, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். அத்தோடு நிறுத்தாமல் மாணவியின் தோழிகள் 3 பேருடன் பழகியுள்ளார். ஒருவருக்கொருவர் தெரியாமல் அனைவரையும் தனியாக அழைத்து சென்று ஏமாற்றியுள்ளார். அதனையும் வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக மாணவி ஒருவர் தல்லாகுளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் சந்துருவை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரின் செல்போனில் மாணவிகளுடன் தனிமையில் இருந்த 50க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர்.

 

Tags :

Share via