ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ குட்கா பறிமுதல்... வியாசார்பாடியில் 3 பேர் கைது...

by Admin / 12-08-2021 02:27:20pm
ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ குட்கா பறிமுதல்... வியாசார்பாடியில் 3 பேர் கைது...

 



சென்னை வியாசார்பாடி பகுதியில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
 
சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் ஆகிய பகுதிகளில் ஆட்டோவில் குட்கா எடுத்துச் செல்லப்படுவதாக எம்கேபி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று காலை முல்லை நகர் சுடுகாடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த எம்கேபி நகர் போலீசார் அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான ஆட்டோ ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அதில் 10 கிலோ குட்கா  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ஆட்டோவை ஓட்டி வந்த ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த தமீம் அன்சாரி வயது 38 என்பவரை கைது செய்த எம்கேபி நகர் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏழுகிணறு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குட்கா  பதுக்கி வைத்திருப்பதாகவும் அண்ணன் தம்பி இரண்டு பேர் குட்கா வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.

இதையடுத்து ஏழுகிணறு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.

 அப்போது அந்த வீட்டில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முகமது காசின் (வயது 40), அவரது தம்பி குலாம் (வயது 31) ஆகிய இருவரையும்  போலீசார் கைது செய்தனர்.

இவர்களிருவரும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து குட்காவை வாங்கிக்கொண்டு வட சென்னையின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர் உட்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo