பேரறிவாளன் விழுப்புரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி

by Admin / 12-08-2021 02:23:04pm
பேரறிவாளன் விழுப்புரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி

பேரறிவாளன் சிகிச்சை பெறும் தனியார் ஆஸ்பத்திரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக சிறையில் அவதிப்பட்டு வந்த பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது.
 
இதையடுத்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பேரறிவாளன் தங்கியிருந்தார். சிறுநீரக கோளாறு தொடர்பாக சிகிச்சை பெறுவதற்காக பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பேரறிவாளன் சிகிச்சை பெறும் தனியார் ஆஸ்பத்திரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo