அன்புமணிக்கு எதிராக நடவடிக்கை.. செயற்குழுவில் தீர்மானம்
பாமக செயல் தலைவர் அன்புமணிக்கு எதிராக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விழுப்புரம் திண்டிவனத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுவெளியில் ராமதாஸின் பேச்சுக்கு கட்டுப்படாமல் இருப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமகவை பலவீனப்படுத்தும் வேலையில் அன்புமணி ஈடுபட்டுள்ளதாகவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, ராமதாஸின் மகள் காந்திமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags :


















