மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளான்ட்டிற்கு திரவ ஆக்சிஜன் நிரப்பல்-3வது அலை வந்தால் எதிர்கொள்ள ஆயத்தம்

by Admin / 10-08-2021 05:35:56pm
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளான்ட்டிற்கு திரவ ஆக்சிஜன் நிரப்பல்-3வது அலை வந்தால் எதிர்கொள்ள ஆயத்தம்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 175 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் 10 அவசர சிகிச்சை படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்காக 6 கே.எல் (கிலோ லிட்டர்) கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்ட் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 6 கே.எல்.ஆக்சிஜன் நிரப்பப்பட்டால் 600 சிலின்டர்களில் ஆக்சிஜன் நிரப்ப முடியும் என்பதால் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் இருக்க ஆக்சிஜன் பிளாண்ட்டில் உள்ள டேங்க்கை நிரப்பும் பணி நடைபெற்றது.

திருச்சியிலிருந்து கொண்டு வரப்பட்ட திரவ ஆக்சிஜனைக் கொண்டு நேற்று நிரப்பப்பட்டது. மேலும் ஆக்சிஜன் கான்ச்ட்ரேட்டர் 200க்கும் மேற்பட்ட சாதனங்கள் உள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் தேவையான ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் உள்ளன.

 மேலும் தேவையான அளவு பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு நன்கொடையாக அளித்து வருகின்றன. சென்ற மாதம் மேலும் 20 சாதனங்கள் மயிலாடுதுறை மாவட்ட அலுவலகத்திற்கு வந்துள்ளது.

 3வது அலை வந்தால் அவற்றை சமாளிக்க தேவையான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் குழந்தைகள் அவசர சிகிச்சை படுக்கைகள் 10 அறைகள் ஒதுக்கப்பட்டு ஆக்சிஜன் படுக்கையுடன் தயார் நிலையில் உள்ளது.

 

Tags :

Share via