கோழி மசாலா செய்முறை

by Admin / 11-08-2021 11:23:01am
கோழி மசாலா செய்முறை

தேவை

கோழி – 1

தயிர் – 1 கப்

பெல்லாரி – 1

எலுமிச்சம் பழம் – 1

ஏலக்காய் – 1

பட்டை – 1

வற்றல் – 7

பூண்டு – 1

இஞ்சி – 1 துண்டு

மிளகு – 10

சீரகம் – 1 தேக்கரண்டி

கிராம்பு – 7

கசகசா – மேஜைக்கரண்டி

செய்முறை

கறியைப் பெரிய துண்டுகளாக வெட்டித் தயிரில் 1 மணி நேரம் ஊற வைக்கும்போது, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். பெல்லாரியை பொடியாக வெட்டி 6 கரண்டி எண்ணெயில் வதக்கி அரைத்த மசாலையும் சேர்த்து வேக வைக்கவும். வெந்தபின் எலுமிச்சம்பழம் பிழிந்து குழம்பு வற்றி எண்ணெய் தெளியவும் இறக்கவும்.

 

Tags :

Share via