கென்யாவில் அமெரிக்க ஆதரவுடன் முன்மொழிக்கப்பட்ட எபோலா தனிமைப்படுத்துதல் மையத்திற்கு எதிராக போராட்டங்கள்
கென்யாவில் அமெரிக்க ஆதரவுடன் முன்மொழிக்கப்பட்ட எபோலா தனிமைப்படுத்துதல் மையத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து உள்ளன. நன்யுகி நகரில் உள்ள லைகிபியா விமானப்படை தளத்திற்கு அருகே நூற்றுக்கணக்கான மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது காவல்துறையை துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையை மறித்து டயர்களை கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர்களை கரைப்பதற்காக காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளையும் துப்பாக்கி சூட்டையும் நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகினர் கென்யாவின் உயர்நீதிமன்ற நீதிபதி பாட் ரிஷியா நீயாவுண்டி எபோலா மையத்தை உருவாக்குவதற்கும் இயக்குவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை மேலும் 3 வாரத்திற்கு நீடித்துள்ளார். அமெரிக்காவுடன் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகளை ஏழு நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று எண்ணிய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதோடு விசாரணை ஜூன் 23 அன்று நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. காங்கோ மற்றும் உகாண்டாவில் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அறிகுறி அற்ற நிலையில் இருக்கும் அமெரிக்க குடிமக்களை தனிமைப்படுத்தி பராமரிப்பதற்காக 50 படுக்கைகள் கொண்ட தற்காலிக மையம் திறப்பதற்கு திட்டமிடப்பட்டது கென்யாவில் இதுவரை எபோலா பாதிப்பு இல்லாத நிலையில் அமெரிக்கர்களின் எபோலா பாதிப்பு ஆபத்தை தங்கள் நாட்டின் மீது திணிப்பதாக உள்ளூர் மக்களும் மருத்துவர்களும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன இது உள்ளூர் மக்களுக்கு தொற்றை பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்கின்றனர். கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ இந்தத் திட்டத்தை ஆதரித்து ஆதரித்து பேசியதோடு இது நாட்டின் பொதுவான பெரும் தொற்று தடுப்பு தயார் நிலைக்கான ஒரு பகுதி என்றும் அமெரிக்க உடனான நீண்ட கால சுகாதாரக் கூட்டான்மையின் அடிப்படையில் எட்டப்பட்ட பரஸ்பர ஒப்பந்தம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Tags :


















