பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கான் நேற்றுராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

by Admin / 10-05-2023 12:48:03pm
 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கான் நேற்றுராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கான் நேற்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற விசாரணைக்கு வந்த பொழுது கைது செய்யப்பட்டார். ராணுவம் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக ராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்... இதன் காரணமாக கிரிக்கெட்டின் முன்னாள் வீரரும் இந்நாள் பாகிஸ்தானின் மிகப்பெரிய கட்சியினுடைய தலைவராகவும் முன்னாள் பிரதமராகவும் இருக்கக்கூடிய அவரை கைது செய்ததற்கு  தொண்டர்கள் மிக கோபமடைந்து ராணுவ அலுவலகங்கள், ராணுவ அதிகாரிகளின் வீடுகளில் புகுந்து சூறையாடினர்.  ஒரு மாத காலமாக ஒரு நெருக்கடியான ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பது பற்றி பல்வேறு கருத்துக்கள்வெளியாகின்றன.  ஆளும் பாகிஸ்தான் அரசு சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரவி விடாமல் இருப்பதற்காக டுவிட்டர்-யூடியூப் , பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை இயங்க விடாமல் செய்து இருக்கின்ற சூழலும் நிலவுகின்றது .இணையதளங்கள் முற்றிலமாக முடக்கப்பட்டுள்ளன. இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு முதன்மையான செய்தி இதழ்களும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. பொதுமக்களும் இம்ரான் கானுடைய கைதிற்கு ராணுவத்தின் மீது கடுமையான கோபமாக இருக்கின்ற காணொளி காட்சிகளும் வெளியாகி மக்களுடைய சூழலை வெளிப்படுத்தி வருகின்றன .இம்ரான் கான் இது குறித்து நேற்று அவர் வெளியிட்டிருந்தடுவிட்டர் பக்கத்தில் தான் கைது செய்யப்படலாம் என்றும் அடுத்து நடக்கப் போகின்ற தேர்தலில் தான் பங்கேற்காமல் இருப்பதற்கான முயற்சியை இந்த அரசாங்கம் செய்வதாகவும் ட்விட்டரில் பதிவு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

 

 

Tags :

Share via