5 நாட்களுக்கு தமிழகம் புதுவையில் மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

by Editor / 24-09-2022 08:49:04am
 5 நாட்களுக்கு தமிழகம் புதுவையில் மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்று வேகமாக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம் புதுவையில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் ஆகியவற்றில் இன்று முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

Tags :

Share via

More stories

Logo